அருள்மிகு ஸ்ரீ ஓசூர் அம்மன் ஆலயம் 300 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த ஆலயம் ஆகும்.
திருத்தல வரலாறு:
கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பாக பாலாற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் ஓசூரில் இருந்து சுயம்பு அம்மன் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு செங்கல்பட்டு பாலாற்றங்கரையில் கிடைக்கப்பெற்றது.
அதைக் கண்ட செங்கல்பட்டு பெரிய நத்தம் கிராமத்தார்கள் அந்த சுயம்பு அம்மனை பூஜை செய்து ஆலயம் அமைக்க முடிவு செய்தனர். இதைக் கேள்விப்பட்ட ஓசூரை சேர்ந்த பெரியவர்கள் இந்த சுயம்பு அம்மன் எங்கள் பகுதியை சார்ந்தது மீண்டும் அந்த அம்மனை எங்களிடம் கொடுத்து விடுங்கள் என்று வேண்டினார் ஆனால் கிராமத்தார்கள் அம்மன் எங்கள் கிராமத்தை தேடி வந்ததால் நாங்கள் இந்தப் பகுதியிலேயே கோவில் அமைத்து வழிப்பட உள்ளோம் என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர் அதன் பிறகு அம்மனுக்கு கோயில் கட்டப்பட்டது. இந்த சுயம்பு அம்மன் ஓசூரில் இருந்து வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதால் ஓசூர் அம்மன் என்று அழைக்கப்பட்டது. இந்த திருத்தலத்தில் உள்ள அம்மன் சிலை சமயபுரத்து அம்மன் சிலையை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது
இத்திருத்தலத்தின் தல விருட்சமாக அரசமரம் ஆலமரம் வேப்பமரம் மூன்றும் சேர்ந்த வண்ணம் அமைந்துள்ளது மேலும் இந்த மரத்தடியில் விநாயகர் சிலை உடன் ராகு கேதுவும் நிறுவப்பட்டுள்ளதால் இந்த மரத்தை சுற்றி வருவதன் மூலம் திருமண தடையும் குழந்தை பாக்கியம் தடையும் நீங்கி நீங்காத செல்வம் பெறுவார். இந்த திருத்தலத்தில் அம்மன் நாகவடிவில் அவ்வப்போது காட்சியளிப்பது வழக்கமாக உள்ளது.
இந்த திருத்தலத்தில் காணக் கிடைக்காத காசி வில்வ மரம் இருப்பது மற்றொரு மகத்தான விசேஷம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு இரண்டாவது வாரம் காப்பு கட்டி மூன்றாவது வாரம் கூழ் வார்த்தல் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். மேலும் நவராத்திரி விழா, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் கிடைக்க ஆடிப்பூரம் விழா, நாக பஞ்சமி விழா, தமிழ் புத்தாண்டு விழா, ஆங்கில புத்தாண்டு விழா, மாட்டுப் பொங்கல் விழா என மிக விமர்சியாக திருவிழாக்கள் நடைபெறும். மற்றொரு அதிசயமாக திருத்தலத்தில் பெருமாளுடன் ஆஞ்சநேயர் சிலையும் நிறுவப்பட்டுள்ளதால் ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமை தோறும் பெருமாளுக்கும் , அனுமன் ஜெயந்தி அன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

பரிகாரத்தலம்:
1. இத்திருத்தலத்தில் அமைந்துள்ள நாகக்கன்னிகைக்கு பூஜை செய்வது மூலம் திருமண தடை மற்றும் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.
2. திருத்தலத்தில் அமைந்துள்ள தல விருச்சத்தை சுற்றுவதன் மூலம் நீங்காது செல்வமும், குழந்தை பாக்கியமும், நீண்ட ஆயிலும் பெறுவர்.
இந்த திருத்தலத்தில் பரிகாரம் செய்ய வடக்கு மற்றும் தெற்கிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.